கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!கிளிப்பிங்ஸ்!!!

Monday,1st of October 2012
சென்னை::உடல் உறுப்பு தானத்தை மையமாக வைத்து மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ‘டிராபிக் படம் தமிழில் டைட்டில் வைக்காமல் ஷூட்டிங் நடந்தது. தற்போது ‘சென்னையில் ஒரு நாள்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘தலைமுறைகள்' என்ற படத்தை இயக்க திட்டமிட்டுள்ள பாலு மகேந்திரா அப்படத்தின் ஷூட்டிங்கை முழுமையாக முடித்தபிறகு இளையராஜாவிடம் திரையிட்டு காட்டி இசை அமைக்க கேட்க உள்ளாராம்.

பி.சி.அன்பழகன் இயக்கும் ‘நதிகள் நனைவதில்லை’ படத்தில் அறிமுகமாகும் ஜெய்ஜித், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கத்தின் இளைய மகன் ஆவார்.

அமலா மகன் அகில் லாஸ் ஏஞ்சல்சில் திரைப்பட கல்லூரியில் படிக்கிறார். 18 வயதாகும் அவருக்கு சினிமாவில் நடிகராகவும் டெக்னீஷியனாகவும் சாதிக்க ஆசையாம்.

பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9' படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. மகேஷ்ராவ் இயக்கும் இதில் ‘வாடா போடா நண்பர்கள்' படத்தில் நடித்த சிந்து லோக்நாத் ஹீரோயினாக நடிக்கிறார்.

* கோலிவுட் நமீதாவுக்கு போட்டியாக மல்லுவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார் நமீதா பிரமோத். ‘டிராபிக் என்ற படத்தில் அறிமுகமான இவர் தற்போது சத்யன் அந்திக்காடு இயக்கும் படத்தில் நடிக்கிறார். இவர் தனது பெயரை மாற்றிக்கொள்ளப்போவதில்லையாம்.

* ஸ்ரேயா நடிக்கும் ‘சந்திரா பட ஷூட்டிங் நியூயார்க்கில் நடந்தது.
* தமன்னாவுடன் அடிக்கடி பேஸ்புக்கில் பேசும் அனுஷ்காவுக்கு காஜல் அகர்வாலின் அழகும், நயன்தாராவின் துணிச்சலும் பிடிக்குமாம்.

* ‘கடல் படத்துக்காக ராதா மகள் துளசி 12 கிலோ உடல் எடையை குறைத்தாராம்.
* ‘காதல் சந்தியா மலையாளத்தில் ‘மை டியர் மம்மி படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கிறார். அவருடன் கல்லூரிக்கு செல்லும் அம்மாவாக வேடமேற்கிறார் ஊர்வசி.

* ‘மலை மலை’, ‘மாஞ்சா வேலு’, ‘தடையற தாக்க’ படங்களின் ஷூட்டிங்கை சென்டிமென்ட்டாக பழனி முருகன் கோயிலில் தொடங்கிய அருண் விஜய் அடுத்து நடிக்கும் ‘டீல்’ பட ஷூட்டிங்கையும் பழனியில் தொடங்கினார்.
* ‘லவ் டுடே’ படத்துக்கு இசை அமைத்த சிவா தனது பெயரை ஹரிஹரன் என்று மாற்றிக்கொண்டு ‘ஒருவர் மீது இருவர் சாய்ந்து’ என்ற படத்துக்கு இசை அமைக்கிறார்.
* ‘சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு என் படத்தில் நடிக்கிறீர்களே’ என்று திலகனிடம் கேட்டபோது, ‘நீ வெறும் ஸ்டார், சூப்பர் ஸ்டார் இல்லையே’ என்று கூறிய திலகனின் துணிச்சலை அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியபோது நினைவு கூர்ந்தார் மம்மூட்டி.
* ‘நான் ஈ’ படம் இந்தியில் ‘மக்ஹி’ என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் முக்கிய வேடமொன்றிற்கு டப்பிங் குரல் கொடுக்க சம்மதித்திருக்கிறார் பாலிவுட் ஹீரோ அஜய் தேவ்கன்.

Comments