நடிகை சுஜிபாலாவை திருமணம் செய்யமாட்டேன்: இயக்குனர் ரவிக்குமார் பேட்டி!!!

Monday,8th of October 2012
சென்னை::சுஜிபாலா ‘அய்யா வழி’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். ‘முத்துக்கு முத்தாக’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘உண்மை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பி. ரவிக்குமார் இயக்குகிறார்.

படப்பிடிப்பில் சுஜிபாலாவுக்கும், ரவிக்குமாருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். பெற்றோர் சம்மதத்துடன் நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது.

பிறகு இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றார். காதலன் திருமணத்துக்கு மறுத்ததால் சாக துணிந்ததாக செய்தி வெளியானது. சுஜிபாலா இதனை மறுத்தார். நிச்சயிக்கப்பட்டபடி ரவிக்குமாருடன் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தில் உள்ள சுஜிபாலா வீட்டுக்கு ரவிக்குமார் திடீரென்று சென்றார். அப்போது சுஜிபாலாவுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திருமணத்துக்கு மறுத்ததுடன் சுஜிபாலைவை பிடித்து தள்ளிவிட்டு வீட்டை விட்டு அவர் வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது. அப்போது வீட்டில் இருந்த சில ஆவணங்களை எடுத்து சென்றதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இயக்குனர் பி.ரவிக்குமார் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

‘உண்மை’ படத்தை இயக்கி வருகிறேன். அதில் சுஜிபாலாவுடன் இணைந்து நடிக்கவும் செய்கிறேன். என்னைப் பற்றியும், சுஜிபாலா பற்றியும் தவறான செய்திகள் பரவியுள்ளன. எனக்கும் சுஜிபாலாவுக்கும் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் தற்போது எங்கள் இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பிரிந்துவிட முடிவு செய்துள்ளோம். எனக்கும், சுஜிபாலாவுக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் இல்லை.

இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.

27-7-12_findyour_INNER_468x60.gif

Comments