லண்டன் பட விழாவில் ஸ்ரேயா!!!

Wednesday,17th of October 2012
சென்னை::லண்டனில் நடைபெறும் பிஎப்ஐ பட விழாவில் நடிகை ஷ்ரேயா கலந்துகொண்டார். இவர் நடித்த 'மிட்நைட் சில்ட்ரன்' படம் அங்கு திரையிடப்படுகிறது.

சர்ச்சைக்குரிய எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, 1981ஆம் ஆண்டு எழுதிய இந்திய, பாகிஸ்தான் பிரிவினையை அடிப்படையாக கொண்ட 'மிட்நைட் சில்ட்ரன்' என்ற நாவல் அதே பெயரில் திரைப்படமாகிறது. தீபா மேத்தா இயக்கும் இப்படத்தில் ஸ்ரேயா நடிக்கிறார்.

லண்டனில் நடைபெற்று வரும் 56வது பிஎப்ஐ திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படவுள்ளது. இந்த பட விழாவில் கலந்துகொள்வதற்காக ஸ்ரேயா லண்டன் சென்றுள்ளார். அவர் சல்மான் ருஷ்ட்டி மற்றும் படத்தின் இயக்குநர் தீபா மேத்தாவுடன் விழாவில் கலந்துகொண்டார்.

இந்தப் படம் பெரும் சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தொட்டிருப்பதால் இப்படத்தை இந்தியாவில் திரையிட யாருமே முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments