Tuesday, 9th of October 2012
சென்னை::*ராதா மோகன் இயக்கும் ‘கவுரவம்’ படத்தில் அறிமுகமாகும் அல்லு சிரிஷ், டோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுனின் சகோதரர். இப்படத்தில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
*விஜய் நடிக்கும் ‘துப்பாக்கி’ பட டைட்டில் பிரச்னை சுமுகமாக முடிந்ததையடுத்து பாடல் சிடி வெளியீட்டில் மும்முரமாக இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
*இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தை பார்த்து சென்டிமென்ட் காட்சிகளில் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் கண்ணீர் விட்டாராம்.
*/சசிகுமார் நடித்துள்ள ‘சுந்தரபாண்டியன்’ படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதற்கான உரிமையை பீமனேனி ஸ்ரீனிவாசராவ் பெற்றிருக்கிறார்.
*சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் சந்தானமும் இணைந்து நடிக்க உள்ளார்.
* தணிக்கையில் ‘ஏ’ சான்று பெற்ற படங் களை டி.வியில் திரையிடுவதற்கான கட்டுப்பாடு உள்ளது. தற்போது அதற்கான அங்கீகாரத்தை வழங்க மத்திய தணிக்கை குழுவின் உத்தரவுக்கு ஏற்ப பாலிவுட்டில் மூத்த திரையுலகினர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கோலிவுட்டிலும் குழு அமைக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
* ‘அட்டகத்தி’ ஹீரோயின் நந்திதா தற்போது ‘எதிர்நீச்சல்’, ‘நலனும் நந்தினியும்’ படத்தில் நடிக்கிறார்.
* ‘மாற்றான்’ படத்தின் ரஷ் பார்த்த சூர்யா சில காட்சிகளை ரீ ஷூட் செய்யச் சொல்லி நடித்தாராம்.
* ‘பைவ் ஸ்டார்’ ஹீரோ யின் கனிகா திருமணத் துக்கு பிறகு மலையாள படங்களில் நடிக்கிறார். மம்மூட்டியுடன் ஏற்கெனவே 3 படங்களில் நடித்தவர் தற்போது ரஞ்சித் இயக்கும் மற்றொரு படத்தில் மம்மூட்டியுடன் நடித்து வருகிறார்.
* சுவிட்சர்லாந்து ஷூட்டிங் முடித்துக்கொண்டு ‘சேட்டை’ பட குழுவினருடன் மும்பையில் முகாமிட்டிருக்கிறார் இயக்குனர் கண்ணன். அங்குள்ள கடற்கரையோர பகுதியில் ஷூட்டிங் நடக்கிறது.
Comments
Post a Comment