நேரடி தெலுங்குப் படத்தில் விஷால்!!!

Monday,8th of October 2012
சென்னை::விஷாலின் திமிரு, சண்டைக்கோழி படங்கள் தெலுங்கில் தமிழ் அளவுக்கு வரவேற்பை பெற்றன. அதைத் தொடர்ந்து நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க அவருக்கு அழைப்புகள் வந்தன. ச‌ரியான கதை அமையாமை, நேரமின்மை காரணமாக நேரடி தெலுங்குப் படம் சாத்தியமாகவில்லை. விஷாலின் பூர்வீகம் ஆந்திரா. அங்கு வெற்றிக் கொடி நா
ட்ட வேண்டும் என்பது விஷாலின், அவரது குடும்பத்தா‌ரின் பேரவா.


அந்த‌க் கனவை நனவாக்கும் தேவதூதனாக வந்திருக்கிறார் இயக்குனர் சஷிகாந்த். இவர் சொன்ன கதை விஷாலுக்கு பிடித்திருக்கிறது. அதைவிட அவரது சகோதரர் தயா‌ரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணாவுக்கு. மதகஜராஜாவுக்குப் பிறகு அப்படியொன்றும் பிரமாதமான வாய்ப்பு விஷாலுக்கு இல்லை. ஆக, நேரமும் உள்ளது. உடனே ச‌ரி சொல்லியிருக்கிறார்.

மதகஜராஜா முடிந்த பிறகு நவம்ப‌ரில் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தின் பெயர் மற்றும் ஹீரோயின், தெழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி மிக விரைவில்.

Comments