சென்னை::ரஜினி நடிக்கும் கோச்சடையான் படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. அடுத்து ரஜினி யார் இயக்கத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்கப் போவதாக வதந்தி பரவியது. இவர் ஏற்கனவே ‘அயன்’, ‘கோ’ ஹிட் படங்கள் எடுத்துள்ளார். தற்போது சூர்யாவை ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடிக்க வைத்து ‘மாற்றான்’ படத்தை எடுத்து வருகிறார்.
கே.வி. ஆனந்திடம் கேட்டபோது ரஜினி படத்தை இயக்கவில்லை என மறுத்து விட்டார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. ராஜமவுலி தெலுங்கில் முன்னணி இயக்குனராக உள்ளார். இவர் சமீபத்தில் டைரக்டு செய்த ‘நான் ஈ’ படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றிகரமாக ஓடி கோடிக்கணக்கில் வசூலை குவித்தது. இந்த படத்தை ரஜினிக்கு திரையிட்டு காட்டினார். படம் அவருக்கு மிகவும் பிடித்து போனது இந்திய சினிமாவில் முக்கிய படமாக இது இருக்கும் என்று பாராட்டினார்.
ரஜினிக்கேற்ற கதையொன்றை ராஜமவுலி தயார் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கதை ரஜினிக்கு பிடித்து போனதாம். இவரும் அடிக்கடி சென்னையில் சந்தித்து கதை பற்றி விவாதிக்கிறார்களாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கில் தயாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.

Comments
Post a Comment