வெள்ளிக்கிழமையான இன்று திரையரங்குகளில் புதிதாக வெளியான படங்கள்!!!

Friday,26th of October 2012
சென்னை::வெள்ளிக்கிழமையான இன்று திரையரங்குகளில் புதிதாக இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன.
அதில் ஒன்று ஆரோகணம். இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ப்ரிவ்யூ காட்சியிலேயே பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு மழையில் நனைந்துள்ளது. முன்னணி கதாநாயகர்கள், கதாநாயகிகள் யாரையும் நம்பி படம் எடுக்காமல், கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டுள்ள படம் ஆரோகணம். 17 வயது இளைஞன் தனது சகோதரியுடன் சேர்ந்து தொலைந்து போன தனது தாயை தேடுவதை மையமாகக் கொண்ட படமாகும். படம் முழுக்க ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் அழகாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த படம் மயிலு. ஹரிஷ் தயானி வழங்கும் இப்படம் இன்று வெளியாகிறது. இளையராஜாவின் இசையில் அமைந்த இப்படம், கிராமத்து பின்னணியைக் கதையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியாகும் இரண்டு படங்களுமே உணர்ச்சியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments