கமலின் ‘விஸ்வரூபம்’ படம் தணிக்கை செய்யப்பட்டது: சர்ச்சை காட்சிகள் நீக்கம்!!!

Wednesday,10th of October 2012
சென்னை::கமல் இயக்கி, நடிக்கும் படம் 'விஸ்வரூபம்'. இப்படத்தின் நாயகிகளாக பூஜாகுமார், ஆண்ட்ரியா நடிக்கின்றனர். வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்தது. நவீன சவுண்ட் தொழில்நுட்பத்தில் இப்படத்தை கமல் உருவாக்கி உள்ளார். ஹாலிவுட் நிபுணர்கள் இப்படத்தை பாராட்டி உள்ளனர். தமிழ், இந்தி மொழிகளில் இப்படம் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். தமிழ் பதிப்பை பார்த்த தணிக்கை குழுவினர் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. பின்னர் படத்துக்கு ‘யு.ஏ.’ சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்தி ‘விஸ்வரூபம்’ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் காட்சிகள் எதையும் நீக்காமல் ‘ஏ’ சான்றிதழ் அளித்தனர். படத்தின் பாடல் வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடக்கிறது. டிசம்பர் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.

Comments