சுந்தர பாண்டியன் இயக்குனர், உதயநிதி இணைகிறார்கள்!!!

Tuesday,2nd of October 2012
சென்னை::-சுந்தர பாண்டியன் படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு, அதன் இயக்குனர் என்.ஆர்.பிரபாகரனுக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சுந்தர பாண்டியன் படத்தை உதயநிதி ஸ்டாலினும், கிருத்திகா ஸ்டாலினும் தனியாக பார்த்தனர். பின்னர் பிரபாகரனை பாராட்டிய இருவரும் அந்த இடத்திலேயே ஒரு தொகையை அட்வான்சாக கொடுத்து அடுத்த படத்தை ரெட் ஜெயண்டுக்கு இயக்குமாரும், படத்தின நாயகன், நாயகி தேர்வு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். படப்பிடிப்பு எங்கே எப்போது என்று மட்டும் சொல்லுங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதை ரகசியமாக வைத்திருக்கிறார் பிரபாகரன்.

அட்வான்ஸ் கொடுத்தவன் நண்பனா இருந்தா வெளியில சொல்லக்கூடாதோ...!!!

Comments