Tuesday, 9th of October 2012
மும்பை::ஊர்மிளாவுடன் இயக்குனர் ராம் கோபால் வர்மா தொடர்பு வைத்திருந்ததை தனது புத்தகத்தில் அம்பலப்படுத்தி இருக்கிறார் அவரது முன்னாள் மனைவி. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் முன்னாள் மனைவி ரத்னா. இவர் ‘ஓட்கா வித் வர்மா என்ற தலைப்பில் புத்தகம் எழுதி இருக்கிறார். அதில் ராம் கோபால் வர்மாவை கடுமையாக தாக்கி இருக்கிறார். இதுவரை வர்மாவை பற்றி வெளிவராத பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அதில் குறிப்பிட்டிருக்கிறார். தங்கள் விவாகரத்துக்கு பின்னணியாக இருந்த சம்பவம் பற்றியும் தெளிவு படுத்தி இருக்கிறார். இதில் அவரது மகள் பற்றியும் ‘டெவில்ஸ் டாட்டர் என்ற தலைப்பில் கருத்து கூறி இருக்கிறார். இந்த தலைப்பு இந்த அத்தியாயத்துக்கு பொருந்தும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். இந்தியன் படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஊர்மிளாவுடன் வர்மாவுக்கு இருந்த நெருக்கமான உறவை அம்பலப்படுத்தி இருப்பதுடன் மற்றொரு பிரபல நடிகையுடன் இருந்த உறவையும் வெளிச்சம்போட்டு காட்டி இருக்கிறார். சிலர் வர்மாவை விரும்புவார்கள். சிலர் வெறுப்பார்கள். ஆனாலும் யாரும் அவரை தவிர்க்க முடியாது என்றும் ரத்னா குறிப்பிட்டிருக்கிறார்.
Comments
Post a Comment