Friday,26th of October 2012
சென்னை::தமிழில் எதிர்நீச்சல் படத்துக்கு இசையமைத்து வரும் இளம் இசையமைப்பாளர் அனிருத்துக்கு இரண்டாவது இந்திப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியில் சைத்தான் படத்தை இயக்கிய பிஜிய் நம்பியார் விக்ரம், ஜீவா நடிப்பில் டேவிட் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதுதான் அனிருத்தின் முதல் இந்திப் படம்.
தமிழ், இந்தியில் தயாராகும் டேவிட் ஜனவரியில் வெளியாகிறது. அதையடுத்து தான் இயக்கப் போகும் படத்துக்கான ஆரம்பகட்ட வேலைகளை பிஜிய் நம்பியார் ஏற்கனவே தொடங்கிவிட்டார். முதலாவதாக டேவிட் படத்துக்கு இசையமைத்த அனிருத்தையே தனது அடுத்தப் படத்துக்கும் கமிட் செய்திருக்கிறார். அனிருத் வேலை செய்யும்விதம் பிடித்திருப்பதால் அவரையே அடுத்தப் படத்துக்கும் ஒப்பந்தம் செய்ததாக பிஜிய் நம்பியார் தெரிவித்தார்.

Comments
Post a Comment