நயன்தாரா படத்தில் சமீராவின் ஐட்டம் நம்பர்!!!

Thursday,4th of October 2012
சென்னை::சமீரா ரெட்டிக்கு தமிழில் படங்களில்லை. தெலுங்கில் ஜுனியர் என்டிஆருடன் நடித்தவர் இப்போது சுத்தமாக வாய்ப்பின்றி தவிக்கிறார். இதுபோன்ற வறட்சியில் நடிகைகளுக்கு பாலைவனச்சோலையாக இருப்பது ஐட்டம் நம்பர் எனப்படும் ஒரு பாடலுக்கு ஆடுவது.


சதா சமீபத்தில் இப்படியொரு ஆட்டத்தைப் போட்டார். இப்போது சமீராவின் டர்ன்.

வானம் படத்தை இயக்கிய க்‌ரிஷ் ராணா, நயன்தாரா நடிக்கும் படமொன்றை தமிழ், தெலுங்கில் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சமீராவிடம் கேட்கப்பட்டது. முதலில் தயங்கியவர் குத்துப் பாடலில் காட்டும் கிளாமரை வைத்தாவது வாய்ப்பு கிடைக்குமா என்று பலத்த யோசனைக்குப் பின் ஓகே சொல்லியுள்ளார்.

சதாவுக்கு சிக்காத வாய்ப்புகள் சமீராவுக்காவது கிடைக்குமா பார்ப்போம்.

Comments