Saturday,27th of October 2012
சென்னை::மும்பையில் ‘கில்லாடி 786’ பட ஷூட்டிங்கில் தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடிய அசினுக்கு ஹீரோ அக்ஷய் குமார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார் நடிப்பில் அனுபவம் இருக்கிறதா என்று கேட்டு ஹீரோயின்களை தேர்வு செய்யும் இயக்குனர்களுக்கு மத்தியில், எந்த அனுபவமும் இல்லாத சாந்தினி கீதா என்பவரை ‘செல்லுலாயிட்’ என்ற மல்லுவுட் படத்துக்காக தேர்வு செய்தார் இயக்குனர் கமல்.
பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க’ படத்தின் இரண்டாம் பாகத்தை ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்க உள்ளார். ‘மத கத ராஜா’ படத்தை இயக்கி வரும் சுந்தர்.சி, அடுத்து சித்தார்த் நடிக்கும் புதிய காமெடி படத்தை தமிழ், தெலுங்கு மொழியில் இயக்க உள்ளார். ‘ராஞ்சா’ இந்தி படத்தில் நடிக்கும் தனுஷ், அடுத்து மலையை குடைந்து பாதை அமைத்த தொழிலாளியின் உண்மை கதையில் நடிக்க உள்ளார். இது தனுஷ் நடிக்கும் 2-வது இந்தி படம்.
கொரியாவை சேர்ந்த டேக்வாண்டோ அமைப்பு மலையாள நடிகர் மோகன்லாலை கவுரவிக்கும் வகையில் கராத்தே பிளாக் பெல்ட் வழங்குகிறது.
‘ஆதிபகவன்’ விழாவுக்கு சேலை உடுத்தி வந்த ஹீரோயின் நீதுசந்திராவை கவிஞர் அறிவுமதி பாராட்டினார். அவரது பாராட்டை கேட்டு மகிழ்ந்த நீது கைகூப்பி கும்பிட்டு நன்றி தெரிவித்தார்.
‘கண்டேன்’ படம் மூலம் அறிமுகமான இசை அமைப்பாளர் விஜய் எபினேசர் ‘கலகலப்பு’ படத்தையடுத்து சிவா, சந்தானம் நடிக்கும் ‘யா யா’ என்ற படத்துக்கு இசை அமைக்கிறார்.
‘ஒய் திஸ் கொலை வெறி’ இசை அமைப்பாளர் அனிரூத் இந்தி, தமிழில் விக்ரம் நடிக்கும் ‘டேவிட்’ படத்துக்கு இசை அமைப்பதுடன் அப்படத்தை இயக்கும் பிஜாய் நம்பியாரின் அடுத்த படத்துக்கும் இசை அமைக்க உள்ளார். தமிழில் தனுஷ் தயாரிக்கும் ‘எதிர்நீச்சல்’ படத்துக்கும் இசை அமைக்கிறார்.
லிங்குசாமி தயாரிக்கும் ‘கும்கி’ படத்தில் அறிமுகமாகும் விக்ரம் பிரபு மீண்டும் அவரது தயாரிப்பிலேயே தனது 2வது படமும் நடிக்கிறார். ‘எங்கேயும் எப்போதும்’ இயக்குனர் சரவணன் இயக்குகிறார். இவர் இயக்கும் 2வது படமும் இதுதான்.

Comments
Post a Comment