கோடம்பாக்கம் கோடங்கி!!!

Monday,8th of October 2012
சென்னை::மழை நடிகய வச்சி சேன்டல்வுட்ல எடுக்கற படத்த எப்படியாவது கோலிவுட்ல பிஸ்னஸ் பண்ணணும்னு படாதபாடுபட்றாங்களாம்...  ஆனா யாரும் கண்டுகறமாட்டேங்கறாங்களாம். எடுக்கறதெல்லாம் சேன்டல்வுட் டயலாக். இத வச்சி எப்படி கோலிவுட்ல ஓட்டப்போறாங்களோன்னு டிஸ்டிரிபியூட்டருங்க முணுமுணுக்கறாங்களாம். நடிகையும் கோலிவுட் பக்கம் கவனத்த குறைச்சிட்டு பாலிவுட்ல இடத்த பிடிக்க முடியுமான்ற யோசனைல இருக்காராம். போதாக்குறைக்கு ஸ்லிம்மாகறேன்ற பேர்ல நடிகை வத்தலும் தொத்தலுமா மெலிஞ்சிட்டு போறாராம்... போறராம்...


கோலிவுட் ஹீரோக்கள் கேரக்டருக்கு ஏத்தாப்ல உடற்கட்ட ஏத்தி இறக்கறாங்களாம்...  இப்படி பண்றதுல வழக்கமான உணவு முறைய கட் பண்ணிட்டு வேற உணவு முறைக்கு மாற வேண்டி இருக்காம். இப்படி பண்றதால ஒடம்பு பாதிக்குதாம். ஆனாலும் பிரகாச நடிகர், தில் ஹீரோ, ஜெயம் நடிகர் போன்றவங்க இதுக்கு ஒர்ரி பண்ணாம வர்ற பாதிப்ப பிறகு பாத்துக்கலாம்னு சொல்றாங்களாம். ஆனாலும் டாக்டருங்க அவங்களுக்கு எச்சரிக்க கொடுத்திருக்காங்களாம்...


டோலிவுட்ல கிளாமர் ரூட்ட செல்க்ட் பண்ணியும் சர்மி ஹீரோயினுக்கு போனியாகலயாம்...  மத்த ஹீரோயினுங்களபோல பாலிவுட்டுக்கு எய்ம் வெச்சாராம் அதுவும் ஒர்க் அவுட் ஆகலயாம். வாய்ப்ப எதிர்பாத்து கைய பிசைஞ்சிட்டிருந்தவருக்கு சேன்டல்வுட்லயிருந்து வந்த அழைப்பு இனிப்பா ஊறுச்சாம். ‘படத்துல ஹீரோயின் வேற ஆள், நீங்க ஒத்த பாட்டுக்கு குத்தாட்டம் போடணும்’னு தயாரிப்பு சொன்னதும் கசப் பாயிடுச் சாம். ‘இருக்கறத விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசப்படாதே’னு தோழிங்க காத கடிச்சதும் குத்தாட்டத்துக்கு சம்மதிச்சிட்டாராம்...


சித்தார்த்தமான ஹீரோ பாலிவுட்ல காலத்த கழிச்சிட்டு திடீர்னு சவுத் பக்கம் திரும்ப¤னாராம்... திரும்ப¤னாராம்... நடிச்சிப் பாத்தாரு, பிரச்னைல சிக்கி பாத்தாரு, பப்ளிக் மத்தில நேர்ல வந்தாரு இப்படி பலமா ட்ரை பண்ணியும் பிக்கப் பண்ண முடியலயாம். வெறுத்துப்போனவரு இன்னொரு லக் டிரை பண்றதுக்காக முழுமூச்சுல நடிக்க¤றாராம். ஆனா சவுத்த விட்டு அவர் பாலிவுட்டுக்கு போன கேப்ல இங்குள்ள இளவட்ட ஹீரோங்க ரசிகர் நெஞ்சங்கள கவுத்துப்புட்டாங்களாம்... இதனால நடிகரு கவலையில இருக்காராம்...


நா படத்துல நடிப்ப ருசிச்ச ஆண்டனி இசைக்கு தொடர்ந்து நடிக்க ஆச வந்துருச்சாம்.. வந்துருச்சாம்... முதல் படம் பேர் கொடுத்ததால ஒண்ணு ரெண்டுபேர் கால்ஷீட் கேக்றாங்களாம். ஆனா நோ சொல்லிட்டாராம். இன்னும் 4 படத்த சொந்தமாவே தயாரிச்சி நடிக்க பிளான் பண்ணி இருக்காராம். அப்படி நடிக்க¤ற பட்சத்துல புதுசா இசைல ஆர்வமிருக்க¤ற இளைஞர்களுக்கு சான்ஸ் தரப்போறாராம். அதுதவிர ஹீரோயின்களோடவும் நெருக்கமா நடிக்க¤றதுக்கு மனச திடப்படுத்திருக்காறாம்...


மகேசான தெலுங்கு ஹீரோ படத்துல காஜலான நடிகை ஹீரோயினா நடிக்க இருந்தாரு. சில நாள் ஷூட்டிங்ல நடிச்சும் கொடுத்தாரு. ஆனா இப்போ வேறொரு ஹீரோயின் அதுல நடிக்கிறாரு. காஜலானவரு கால்ஷீட் சொதப்பினதால அவரை தூக்குங்கன்னு மகேசான நடிகரு சொல்லிட்டாராம். அதனால இந்த மாற்றம் நடந்துச்சாம்...


நயன ஹீரோயினுக்கு பட வாய்ப்பு வரிச கட்டுனாலும் செலக்ட் பண்ணித்தான் ஒப்புக்கறாராம்... ..தாஸ்’ இயக்கம் தயாரிக்கற ஒரு படத்துல நடிக்கறதுக்காக கேட்டாங்களாம். ஹீரோ யாருன்னு கேட்டாராம். ஐ காட் நடிகர்னு சொன்னதும் கிரீன் சிக்னல் காட்டி ஓ.கே. சொல்லிட்டாராம். ஏற்கனவே ‘பாஸ்...’ படத்துல நடிச்சப்ப ரெண்டு பேரும் டா, டி போட்டு பேசறளவுக்கு நெருக்கமா இருந்தாங்களாம். அந்த கெமிஸ்ட்ரிதான் நடிகையின் கிரீன் சிக்னலுக்கு காரணமாம்...


சூப்பர் நடிகர் படத்த அடுத்து இயக்கப் போறது யாருன்னு கோடம்பாக்கத்துல அலசறாங்களாம்...  கிராபிக்ஸ் ஈ படத்த சக்சஸ் பண்ணி காட்டுன ராஜ் இயக்கம்தான் சூப்பர் நடிகர் படத்த இயக்கப் போறாருன்னு பேசறாங்களாம். ஆனா ‘கொ’ படத்த இயக்குன ஆனந்த இயக்கம்தான் இயக்கப் போறாருன்னு இன்னொரு தரப்பு பேசறதோட அதுக்கான அட்வான்ஸும் அவர் வாங்கிட்டதா சொல்றாங்களாம். ஆனா ரெண்டு இயக்கமுமே இத இன்னும் உறுதி செய்யலயாம்...


சிங்கர் சின்னமய் இணையதளத்துல பிளாக் வெச்சிருக்காராம்... ஏதாவது ஒரு கருத்து சொன்னா அதுக்கு எதிரா சிலர் ரொம்பவும் அசிங்கமா பதில் சொல்றாங்களாம். இதுல அப்செட் ஆன மய் பாடகி, சம்பந்தப்பட்டவங்கள டோஸ் விட்டாராம். அதோட தப்பா பேசற அந்த மாதிரி ஆளுங்கள தன்னோட பிளாக் இணைப்புல இருந்து வெட்டி விட்டுட்டாராம்...

Comments