Tuesday,23rd of October 2012
சென்னை::பால்கோவா கலரில் இருந்த வேதிகாவை குலாப்ஜாமுன் கலருக்கு மாற்றியிருக்கிறார் நம் பரதேசி பாலா. கலர் மாறினாலும் ஸ்வீட் ஸ்வீட்தானே. வேதிகாவின் பேச்சு எப்போதும் செவிக்கின்பம்.பரதேசி குறித்து பாலா பேசியதைவிட வேதிகா சொன்னவை அதிகம். லேட்டஸ்டாக படம் குறித்து அவர் தெரிவித்திருப்பது திடுக் செய்தி.
மலையாளத்தில் வெளியான எரியும் தணல் நாவலின் தழுவல் பரதேசி என்றுதான் அனைவருக்கும் தெரியும். வேதிகா சொல்லியிருப்பது புதுசு. அதாவது அந்த நாவலின் இன்ஸ்பிரேஷன் மட்டும்தான் பரதேசி. கதையும் மற்ற சமாச்சாரங்களும் பாலாவின் சொந்த சரக்குதானாம்.
அப்படியானால் அகோரி சாமி, அங்ககீன பிச்சைக்காரர்கள், அடாவடி ஹீரோ எல்லோரும் இருப்பார்களே...
கடவுளே இந்த காம்பினேஷனிலிருந்து தமிழ்நாட்டை காப்பாத்துப்பா.
Comments
Post a Comment