Sunday,28th of October 2012
சென்னை::டுவிட்டர் இணையதளத்தின் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளான திரைப்பட பின்னணி பாடகி சின்மயி, காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் சின்மயி தவறான புகார் அளித்ததாக் கூறி, சிலர் கண்டனம் தெரிவித்தும் ,அவர் மீது மான நஷ்ட்ட வழக்கு தொடரப் போவதாகவும் கூறி எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த பிரச்சனையைப் பற்றி திரையுலக பிரமுகர்கள் யாரும் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காத நிலையில், முதல் முறையாக நடிகை குஷ்பு, சின்மயிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். இந்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் குஷ்பு, "பெண்களை இழிவுப்படுத்த நினைக்கும் தரம் கெட்ட மனிதர்கள் அப்படிப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கலாகத்தான் இருப்பார்கள். சின்மயி எடுத்த நடவடிக்கைகள் சரியானவை." என்று கூறியிருக்கிறார்.
Comments
Post a Comment