Saturday,13th of October 2012
சென்னை::வரலட்சுமியுடன் காதல் என்று ஒருபக்கம் கிசுகிசு. இன்னொரு பக்கம்
வீட்டில் அவருக்கு தீவிரமாக பெண் தேடும் படலம். என்னதான் நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.
மத கஜ ராஜாவில் சுந்தர் சி. இயக்கத்தில் நடித்து வருகிறவர் அடுத்து பூபதி பாண்டியனின் பட்டத்து யானையில் நடிப்பதாக இன்னொரு செய்தி. பாலாவின் அடுத்தப் படத்திலும் இவர்தான் ஹீரோ என்றொரு பகீர் செய்தி. யார் இயக்கத்தில் நடித்தாலும் இப்போதைக்கு விஷாலின் படம் வெளியாவதாக இல்லை. மத கஜ ராஜா பொங்கலுக்கே பொங்கும்.
இதனால் விஷாலின் ரசிகர்களை(?) திருப்திப்படுத்தும் வகையில் தீபாவளிக்கு மத கஜ ராஜாவின் ட்ரெய்லரை வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள். முடிந்தால் ஒரு பாடலையும். பாடல் என்றதும் நினைவு வருகிறது. இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பவர் விஷாலின் நண்பர் விஜய் ஆண்டனி. இதில் விஷால் சோலோவாக ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
ஆறடி உயர உடம்பில் ஒரு அமுத குரலா? நம்ப முடியலையே கோவிந்தா.
Comments
Post a Comment