தனுசுடன் ‘ஆடுகளம்’, ஜீவாவுடன் ‘வந்தான் வென்றான்’, படங்களில் நடித்த நடிகை டாப்சிக்காக மீண்டும் மோதல்!!!

Thursday,4th of October 2012
சென்னை::தனுசுடன் ‘ஆடுகளம்’, ஜீவாவுடன் ‘வந்தான் வென்றான்’, படங்களில் நடித்தவர் டாப்ஸி. இவருக்கும் ‘மங்காத்தா’ படத்தில் நடித்த மகத்துக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜ் மஞ்சுவும் டாப்சியை காதலித்ததாக கூறப்பட்டது.

 இதனால் சென்னையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் மகத்தும், மனோஜ் மஞ்சுவும் அடித்துக் கொண்டனர். மகத் பலத்த காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து மனோஜை கைது செய்ய தேடினார். அவர் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றார்.

இதுபோல் டாப்சிக்காக இன்னொரு மோதல் உருவாகியுள்ளது. மலையாளத்தில் மம்முட்டி, நதியா, டாப்சி இணைந்து நடித்த ‘டுவின்ஸ்’ படம் தமிழில் ‘புதுவை மாநகரம்’ என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தை விளம்பரம் செய்ய டாப்சி படங்களுடன் சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இதற்கு மனோஜ் மஞ்சுவின் சகோதரி லட்சுமி மஞ்சு, எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஆதி, டாப்சி நடித்த ‘மண்டல்ல கோதாவரி’ என்ற பெயரில் தெலுங்கு படமொன்றை தயாரித்து வருகிறேன். அந்த படத்துக்காக எடுக்கப்பட்ட டாப்ஸி படங்களை புதுவை மாநகரம் போஸ்டர்களில் பயன்படுத்தி உள்ளனர். இது கண்டிக்கதக்கது. இதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு எடுத்துள்ளேன் என்றார். டாப்ஸி கூறும் போது, தெலுங்கு படத்தில் நடித்த எனது படங்களை ‘புதுவை மாநகரம்’ போஸ்டர்களில் பயன்படுத்தியது எனக்கு தெரியாது என்றார்.

Comments