தூத்துக்குடியில் பலத்த கடும் மழையால் மதுரை போன விமானம்... தூத்துக்குடியிலிருந்து காரிலேயே பயணித்த சூர்யா, அனுஷ்கா!

Thursday,18th of October 2012
சென்னை::தூத்துக்குடியில் பலத்த மழை பெய்த காரணத்தால் விமானம் தரையிறங்கவில்லை. இதனால் அந்த விமானத்தில் ஏறி சென்னை செல்லவிருந்த நடிகர் சூர்யா மற்றும் நடிகை அனுஷ்கா ஆகியோர் விமான பயணத்தை ரத்து செய்து விட்டு காரிலேயே சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி பக்கம் முகாமிட்டிருந்தனர் சூர்யாவும், அனுஷ்காவும். நேற்று மாலை 4.50 மணிக்கு சென்னையிலிருந்து ஒரு தனியார் விமானம் தூத்துக்குடிக்கு வந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக ரன்வேயில் தண்ணீர் தேங்கிக் கிடந்ததால் விமானம் தூத்துக்குடியில் இறங்காமல், மதுரைக்குப் போய் விட்டது.

இந்த விமானத்தில் அமைச்சர் செல்லப்பாண்டியன் பயணித்தார். அவர் மதுரையில் இறங்கி பின்னர் காரில் தூத்துக்குடிக்குப் பயணமானார்.
இதேபோல இந்த விமானத்தில் ஏறி சென்னை செல்வதற்காக நடிகர் சூர்யா, அனுஷ்கா ஆகியோர் தூத்துக்குடி விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் விமானம் தரையிறங்காததால், அவர்கள் விமான பயணத்தை ரத்து செய்து விட்டு காரிலேயே சென்னைக்குப் பயணமானார்கள்.

Comments