Thursday,4th of October 2012
சென்னை::ஒரு விஷயத்தில் நாம் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம். இந்திய அளவில் டாப் 10 ஒளிப்பதிவாளர்களை பட்டியலிட்டால் அதில் ஆறு பேரேனும் தமிழர்களாக இருப்பார்கள். பி.சி.ஸ்ரீராம், ரவி கே சந்திரன், ரவிவர்மன், மணிகண்டன், கே.வி.ஆனந்த், நீரவ் ஷா, நட்டு என்கிற நட்ராஜ்...
இந்திய அளவில் கலக்கிக் கொண்டிருக்கும் பர்ஃபி படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் ரவிவர்மன். படம் பார்த்தவர்கள் ரவிவர்மனை கொண்டாடுகிறார்கள். படம் வேறு ஆஸ்கர் செல்ல பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து மீண்டும் இந்திப் படம் செய்கிறார். இந்தமுறை சஞ்சய் லீலா பன்சாலி. பல வருடங்களுக்குப் பிறகு ராம்லீலா என்ற படத்தை பன்சாலி இயக்குகிறார். இதற்கு அவர் தேர்வு செய்திருப்பது ரவிவர்மனை. ராம்லீலா முடியும் போது ரவிவர்மன் ஏறக்குறைய ஒரு மும்பைவாசியாகியிருப்பார் என்பதுதான் கவலைதரும் செய்தி.
Comments
Post a Comment