Sunday,7th of October 2012
சென்னை::கௌதமுக்கு இது ஏமாற்றத்தின் வாரம் போலிருக்கிறது. விஜய்யை தொடர்ந்து சூர்யாவும் அவரை டீலில் விட்டிருக்கிறார்.
சூர்யாவின் கேரியரில் கௌதமின் படங்களுக்கு சிறப்பான இடமுண்டு. கமர்ஷியல் ஓட்டத்தில் அதையெல்லாம் யார் கணக்கில் எடுப்பது. வாரணம் ஆயிரம் ஷூட்டிங் தொடங்கிய பிறகு ஹரிக்கு கால்ஷீட் தந்து வேல் படத்தை சூர்யா நடித்து முடித்ததை இந்த இடத்தில் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.
சரி, இப்போதைய விஷயத்துக்கு வருவோம். கௌதமுக்கு யோஹன் இல்லை என்றாகிவிட்டது. சரி, சூர்யாவை வைத்து துப்பறியும் ஆனந்தை தொடங்கலாம் என்றால் சிங்கம் 2-வுக்குப் பிறகு லிங்குசாமிக்கு கால்ஷீட் தரும் ஐடியாவில் இருக்கிறாராம். இதையெல்லாம் மனதில் வைத்து முதலில் நீதானே என் பொன்வசந்தம் வரட்டும், அதற்கப்புறம்தான் அடுத்தப் படம் பற்றிய பேச்சே என்று கௌதமும் பேக்கடித்திருக்கிறார்.
பேசாம நீங்களே ஹீரோவாயிரலாமே பாஸ்.
Comments
Post a Comment