Wednesday,31st of October 2012
சென்னை::ஜப்பானில் இருந்து ஒளிபரப்பாகும் டோக்கியோ தொலைக்காட்சி, இந்திய அழகின் பிரதிநிதியாக நடிகை நமீதாவை தேர்வு செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிய பெண்களின் புகைப்படங்கள், அவர்களின் அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரபலத்தை அழகியாக தேர்ந்தெடுத்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்த இருக்கும் டோக்கியோ டிவி, இந்த ஆண்டு இந்தியாவின் அழகியாக நடிகை நமீதாவை அறிவித்துள்ளது.
உலக அளவில் புகழ்பெற்று விளங்கும் சென்னை வாழ் புகைப்படக் கலைஞரான கார்த்திக் சீனிவாசன், எடுத்த புகைப்பட ஆல்பத்திலிருந்து நமீதாவின் ஒரு புகைப்படத்தைத் தேர்வு செய்து, இந்திய அழகின் பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு கடிதத்தில்:
'யாரி சுகி கோ ஜி - அர்பன் லெஜன்ட்ஸ் ஸ்பெஷல்' (Yari-sugi ko-ji -Urban Legends
Special) எனும் தலைப்பில் வரும் நவம்பர் 2-ம் தேதி ஒரு சிறப்பு ஒளிபரப்பை மேற்கொள்கிறோம். இதில் இந்தியாவுக்கான அழகியாக நடிகை நமீதாவை தேர்வு செய்துள்ளோம்.
வரும் நவம்பர் 2-ம்தேதி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள், சம்பவங்களை தொகுத்து வழங்குவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிகள் பற்றி சிறப்பு நிகழ்ச்சியை வழங்குகிறோம். அழகு என்பது நாட்டுக்கு நாடு எப்படி மாறுபடுகிறது என்பதைக் காட்டுவதுதான் நோக்கம்.
இதற்காக இந்திய கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த நடிகை நமீதாவின் படத்தை இந்திய அழகின் பிரதிநிதியாக தேர்வு செய்துள்ளோம்.
இந்திய அழகின் பிரதிநிதியாக நமீதாவின் படத்தை தேர்வு செய்துள்ளோம் என்பதைத் தெரிவிக்கவே இந்த முறையான அறிவிப்பு," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment