விருது வழங்கும் விழா:சென்னையில் திரண்ட நடிகர், நடிகைகள்!!!

Tuesday, 16th of October 2012
சென்னை::சிறந்த நடிகர்-நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாள நடிகைகள் ஏராளமானோர் பங்கேற்றனர். நடிகர்- நடிகைகளின் நடனங்களுடன் கலைநிகழ்ச்சியும் நடந்தது.

ஸ்ரேயா, நீதுசந்திரா, அஞ்சலி ஆகியோர் நடனம் ஆடினார்கள். 1980-ம் ஆண்டுகளில் முன்னணி கதாநாயகிகளாக இருந்த நதியா, சுஹாசினி, ரேவதி, பானுப்பிரியா, ராதா ஆகியோர் மேடைக்கு அழைத்து கவுரவிக்கப்பட்டனர். ரேவதிக்கு இயக்குனர் பாலச்சந்தர் விருது வழங்கினார். அப்போது 'புன்னகை மன்னன்' படத்தில் இருவரும் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி பேசினார்.

இயக்குனர் செல்வராகவன் சுகாசினிக்கு விருது கொடுத்தார். பழைய நட்சத்திர தம்பதி மஞ்சுளா, விஜயகுமாரும் கவுரவிக்கப்பட்டார்கள். விழாவில் சிறந்த நடிகைகளுக்கான விருதுகள் நயன்தாரா, ஸ்ரேயா, சினேகா, ஹன்சிகா மோட்வானி, அஞ்சலி, அமலாபால் போன்றோருக்கு வழங்கப்பட்டன.

மாதவன், ஆர்யா, சிம்பு, திவ்யா, ஸபந்தனா, பார்வதி ஓமனகுட்டன், ஆன்ட்ரியா, சோனியா அகர்வால், பிரசன்னா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பலர் விழாவில் பங்கேற்றனர். பெண்களுக்கான ஆங்கில பத்திரிகை ஒன்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது.

Comments