Friday,5th of October 2012
சென்னை::ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் படத்திற்கு ‘துப்பாக்கி’ என பெயர் வைத்ததில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, முடிவடையாததால் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் தலைப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை.
வழக்கில் வெல்வது முக்கியமல்ல படத்தின் ரிலீஸ் தான் முக்கியம் எனும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் டீம் வேறு ஒரு டைட்டிலையும் தயார் செய்து வைத்துக்கொண்டு அக்டோபர் 5-ஆம் தேதி தீர்ப்பிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அஜித்குமாரின் கட்டுமஸ்தான உடலமைப்பை பார்க்க ஆவலாக இருக்கும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது விஷ்ணுவர்தன் படத்தின் டிரெய்லரையும் அஜித்குமாரின் கெட்-அப்பையும் தான். விஷ்ணுவர்தன் படத்தின் டிரெய்லர் தீபாவளியன்று வெளியிடப்படும் எனத் தெரிகிறது. சென்ற தீபாவளிக்கு அஜித்குமார் நடித்த மங்காத்தா படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அதே போல் இந்த வருடமும் அஜித்குமார் நடிக்கும் படத்தின் போஸ்டர்கள் வெளிவரவிருக்கின்றன. ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் போஸ்டர் டிசைன் செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்தன். அஜித்குமார் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ள இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் நாளை ரிலீஸாகிறது.
Comments
Post a Comment