Tuesday,30th of October 2012
சென்னை::உடல் உறுப்பு திருடி விற்கும் கும்பல் பற்றிய கதையில் கீர்த்தி சாவ்லா நடிக்கிறார். ‘ஆணை’, ‘ஆழ்வார்’, ‘நான் அவனில்லை’, ‘பிறகு’, ‘சூர்யா’, ‘உளியின் ஓசை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் கீர்த்தி சாவ்லா. கடந்த 2 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது ‘காசி குப்பம்’ என்ற படம் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார். இதுபற்றி அப்படத்தை தயாரித்து, இயக்கி ஹீரோவாக நடிக்கும் அருண் கூறியதாவது: படிப்பறிவில்லாத குடிசைப்பகுதி மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களுக்கு நல்லது செய்வதுபோல் நடிக்கிறான் ஒரு அரசியல்வாதி. பேச்சாலேயே பலரை மயக்கி அவர்களின் உடல் உறுப்புகளை திருடி விற்கிறான். இதன் முடிவு என்ன என்பதே கதை. ஷூட்டிங் முழுவதும் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. ஹீரோயினாக கீர்த்தி சாவ்லா நடிக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்கும் அவருக்கு, இது ரீ என்ட்ரி படமாக அமையும். மற்றொரு ஹீரோயின் சவுமியா. ‘ஆடுகளம்’ நரேன், லிவிங்ஸ்டன், ரமா, நெல்லை சிவா ஆகியோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு பிஞ்சலா ஷாம். இசை பாலாஜி. இவ்வாறு அருண் கூறினார்.
Comments
Post a Comment