செல்வராகவன் இயக்கத்தில் ராணா - இசை யுவன்!!!

Tuesday, 9th of October 2012
சென்னை::இரண்டாம் உலகம் படத்தை எடுத்து வருகிறார் செல்வராகவன். இதையடுத்து அவர் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குவதாகவும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் தகவல் வெளியானது. தனது ட்வீட்ட‌ரில் இதனை மறுத்துள்ளார் செல்வா.

ராணா வை வைத்து படம் இயக்குவது குறித்து செல்வராகவன் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறார். அதற்கான காலம் இப்போது கனிந்திருக்கிறது. அடுத்து ராணாவை இயக்குகிறேன் என்று தெ‌ரிவித்திருக்கும் செல்வா, யுவன் மியூஸிக் என்பதையும் தெ‌ளிவுபடுத்தியிருக்கிறார். அப்படியானால் சிம்பு புராஜெக்‌ட்?

ராணா படம் முடிந்ததும் சிம்பு படம். 2013 ல் இவர்கள் இணையும் படம் தொடங்கப்படும்.

ராணா க்‌ரிஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் ஓங்காரம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகி வரும் இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Comments