'அங்காடித் தெரு' மகேஷ் நடிக்கும் 'அடித்தளம்'!!!

Wednesday,24th of October 2012
சென்னை::'அங்காடித் தெரு' மகேஷ் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இயக்குநர் ஷங்கரிடம் பல படங்களுக்கு இணை இயக்குநராக பணியாற்றியவரும், ஒற்றன் படத்தை இயக்கியவருமான பி.எல்.ஆர்.இளங்கண்ணன் இப்படத்தை தயாரித்து இயக்குகிறார்.

இதில் மகேஷுக்கு ஜோடியாக புதுமுகம் ஆருஷி நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், தங்கதுரை, காதல் சரவணன், வெண்ணிலா கபடிக் குழு ஜானகி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

சாமன்ய மக்கள் ஒவ்வொரு நாளும் தங்களுடைய வாழ்வில் சந்திக்கும் காதல், நட்பு, சோகம், சந்தோஷம், நகைச்சுவை ஆகிய நிகழ்வுகளை கொண்டு, அதைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஒரு ஜனரஞ்சகமான பொழுது போக்கு படமாக இப்படத்தை இயக்க இருப்பதாக இயக்குநர் இளங்கண்ணன் கூறினார்.

இப்படத்திற்கு தாஜ் நூர் இசையமைக்க பாடல்களை நா.முத்துக்குமார் எழுதுகிறார். கே.கே ஒளிப்பதிவு செய்கிறார். வி.டி.விஜயன் படத்தொகுப்பு செய்கிறார்.

சென்னை துவங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சேலம், தென்காசி, தேனி ஆகியப் பகுதிகளில் நடைபெறுகிறது. இரண்டு பாடல்கள் சைனாவில் படமாக்கப்படவுள்ளது.

Comments