மீண்டும் நடிக்கிறார் திஷா பாண்டே!!!

Monday,8th of October 2012
சென்னை::நடிகர்களை விமர்சித்த படத்தில் நடித்த திஷா பாண்டே மீண்டும் நடிக்கிறார். நடிகர்களை விமர்சனம் செய்து உருவான படம் ‘தமிழ் படம்’. இதில் சிவா ஹீரோ. ஹீரோயினாக திஷா பாண்டே நடித்தார். படம் ஹிட்டானாலும் ஹீரோயினுக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே வந்தது. இப்படத்தையடுத்து ‘மயங்கினேன் தயங்கினேன்’ படத்தில் நடித்தார். தற்போது ‘கீரிப்புள்ள’ என்ற படத்தில் யுவன் ஜோடியாக நடிக்கிறார். இதுபற்றி இயக்குனர் பெரோஸ்கான் கூறும்போது,‘பாசக்கார நண்பர்கள் படத்தில் யுவனை ஹீரோவாக அறிமுகப்படுத்தினேன். இதையடுத்து சாட்டை என்ற படத்தில் நடித்தார். இதையடுத்து கீரிப்புள்ள படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். நாகா என்ற கதாபாத்திரத்தில் ‘பருத்திவீரன்’ சரவணன் நடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் கீரியும், பாம்பும்போல் எப்போதும் மோதல் நடக்கும். ஏற்கனவே திஷா பாண்டேவின் நடிப்பை இரண்டு படங்களில் பார்த்தேன். மிகையாக இல்லாமல் யதார்த்தமாக நடித்திருந்தார். அதேபோல் யதார்த்தமான கதாபாத்திரம் என்பதால் அவரை தேர்வு செய்தேன். இப்படத்தில் சண்டைகாட்சிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. படத்தில் யாருக்கும் டூப் போடாமல் ஸ்டன்ட் படமாக்கப்பட உள்ளது. தவசிராஜ் ஸ்டன்ட் அமைக்கிறார். மோகனராமன் ஒளிப்பதிவு. ஜெப்ரிக் இசை’ என்றார்.

Comments