Friday,19th of October 2012
சென்னை::நடிகை சமந்தா சென்னையில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்காமல் புறக்கணித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். சமந்தா ‘பாணா காத்தாடி’ படம் மூலம் தமிழில் நாயகியானார்.
‘மாஸ்கோவின் காவேரி’, ‘நடுநிசி நாய்கள்’, ‘நான் ஈ’ படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜீவா ஜோடியாக ‘நீதானே என் பொன்வசந்தம்’. மணிரத்னம் இயக்கும் ‘கடல்’ படங்களில் நடித்து வருகிறார்.
சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா கடந்த வாரம் சென்னையில் நடந்தது. இதில் சமந்தாவுக்கும் விருது அளிப்பதாக இருந்தது. ஆனால் அவர் விழாவுக்கு செல்லவில்லை. நயன்தாரா, ஹன்சிகா, அமலாபால், அஞ்சலி உள்ளிட்ட முன்னணி நடிகைகள் விழாவில் பங்கேற்று விருதுகளை பெற்றனர். ஆனால் சமந்தா சென்னையில் இருந்தும் விழாவுக்கு போகாமல் புறக்கணித்து விட்டார்.
இதுபற்றி அவர் கூறும்போது விருதுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. விருது வழங்கும் விழாக்களில் எப்போதும் நான் கலந்து கொண்டது கிடையாது என்றார்.

Comments
Post a Comment