Wednesday,31st of October 2012
சென்னை::சிம்பு நடித்துள்ள, "போடா போடி படத்தில், லத்தீன் அமெரிக்கன் டான்சராக நடித்துள்ளார் வரலட்சுமி. அப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில், சிம்புவோடு இணைந்து போட்டி போட்டு, நடனமாடி கலக்கி எடுத்திருக்கிறார் வரலட்சுமி.
இதில், அசந்து போன சிம்பு, "அனைத்து வகையான நடனமும் தெரிந்த ஒரு அற்புதமான நடிகை வரலட்சுமி என்று, அவரை புகழ்ந்து பேசி வருகிறார். இப்படி, "போடா போடியில் வரலட்சுமியின் நடனம் பேசப்பட்டதை அடுத்து, "மதகஜராஜா படத்திலும், ஒரு அதிரடி பாடலில், விஷாலுடன் வரலட்சுமியை ஆட வைத்துள்ளார் சுந்தர்.சி.
முதலில் டூயட் பாடலாக ரெக்கார்டிங் செய்த அப்பாடலை, பின்னர் குத்துப்பாட்டாக மாற்றி, செமத்தியாக நடனமாட வைத்திருக்கிறாராம்.
Comments
Post a Comment