Wednesday,31st of October 2012
சென்னை::கதை இல்லாமல் படமெடுத்தாலும் எடுப்பேனே தவிர சந்தானம் இல்லாமல் படமெடுக்க மாட்டேன் என்று இயக்குனர் ராஜேஷ் எம். கற்பூரம் அணைத்ததாக ஒரு பேச்சிருக்கிறது. வேறு சிலர்இ சந்தானம் இருந்தால் கதையே தேவைப்படாது என்பதால்தான் ராஜேஷ் எம். அவரை தொடர்ந்து பயன்படுத்துவதாகக் கூறுகிறார்கள். இதற்கு சான்றாக ராஜேஷ் எம். இயக்கிய படங்களில் கதை என்ற ஒரு வஸ்து இல்லாததையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஏறக்குறைய சுந்தர் சி.யும் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். கவுண்டமணியால் காப்பாற்றப்பட்டு வந்தவரை பிறகு வடிவேலு போஷித்தார். நடுவில் அவர் முறுக்கிக் கொள்ள விவேக்கிடம் தஞ்சமடைந்தார். தவறு பஞ்சமடைந்தார் என்பதுதான் சரி. அந்தளவுக்கு மொக்கை போட்டார் சின்ன கலைவாணர். சந்தனத்துடன் சேர்ந்த பிறகு கலகலப்பு என்ற சூப்பர்ஹிட். யுரேகா என்று கத்தாத குறைதான். தனது அடுத்தப் படத்தின் ஹீரோவை ஒப்பந்தம் செய்வதற்கு முன் சந்தானத்துக்கு அட்வான்ஸ் தந்ததாகக் கேள்வி.
இவர்களின் இந்த அன்புப்பிடி போதாது என்று புதிதாக ஒருவர் சேர்ந்திருக்கிறார்இ உதயநிதி ஸ்டாலின். ஓகே ஓகே பாக்ஸ் ஆஃபிஸில் ஓகே ஆனதற்கு சந்தானம் மெயின் காரணம் என்பதை புரிந்து தனது அடுத்தப் படத்துக்கும் அட்வான்ஸ் தந்திருக்கிறாராம்.
சுந்தரபாண்டியன் பிரபாகரன் இயக்கப் போகும் படத்தில் உதயநிதியுடன் சந்தானமும் நடிக்கிறார். அடுத்த வருடம் ஜனவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
Comments
Post a Comment