Monday,8th of October 2012
சென்னை::திரைப்பட நடிகை ஹன்சிகா எடுக்கப் போகிற புதிய அவதாரம் "தயாரிப்பாளர்"!
ஹன்சிகா இப்பொழுது 4 தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. சேட்டை, வாலு, வேட்டை மன்னன் மற்றும் சிங்கம்-2 ஆகிய படங்கள் ஹன்சிகா வசம்!
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிற ஹன்சிகா, இந்த மூன்று மொழிகளிலும் படங்களைத் தயாரிக்க முடிவு செய்திருக்கிறாராம். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஹன்சிகா, என்னுடைய நீண்டநாள் கனவு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்பது. இப்பொழுது மூன்று மொழிப் படங்களிலும் நடிப்பதால் இன்னும் வசதியாக இருக்கிறது என்கிறார்.
கொடி பறக்குற நேரத்துல பேஸ்மெண்ட்டை ஸ்டிராங்கா போட்டுக்கிறாங்களோ!
Comments
Post a Comment