Thursday,25th of October 2012
சென்னை::கமல்ஹாசனின், "விஸ்வரூபம் படத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா, அதையடுத்து, "வேட்டை தெலுங்கு "ரீ-மேக்கில் நடித்து வருகிறார். தமிழில் தற்போது, "என்றென்றும் புன்னகை படத்தில் நடிக்கிறார். இந்த மூன்று படங்களிலுமே, இரண்டாம் நாயகியாக தான், ஆண்ட்ரியா இடம் பெற்றுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை, ஹீரோயின் என்ற அடைமொழி தேவையில்லை. எந்த மாதிரியான கதாபாத்திரத்துக்கும் பொருந்தக் கூடிய ஒரு நடிகையாக இருந்தாலே போதுமென்று நினைக்கிறேன் என்றார். இப்படி சொல்லும் ஆண்ட்ரியா, "விஸ்வரூபத்தில் பூஜாகுமாரையும், "என்றென்றும் புன்னகையில் த்ரிஷாவையும் ஹீரோயின் என்று குறிப்பிடும் போது, அவர்கள் மீது எனக்கு எந்த ஈகோவும் வரவில்லை என்கிறார்
Comments
Post a Comment