இறுதி‌ கட்‌ட‌ படப்‌பி‌டி‌ப்‌பி‌ல்‌ 'உன்‌ வருகை‌க்‌கா‌க-லா‌லி‌'!!!

Thursday,25th of October 2012
சென்னை::நா‌ர்‌த்‌ ஈஸ்‌ட்‌ பி‌லி‌ம்‌ பே‌க்‌டரி‌ மற்‌றும்‌ ரங்‌கீ‌லா‌ எண்‌டர்‌பி‌ரை‌சஸ்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌த்‌துள்‌ள படம்‌ 'உன்‌ வருகை‌க்‌கா‌க - லா‌லி‌'.

பு‌துமுகம்‌ மெ‌ளரி‌யா‌, சோ‌னி‌யா‌ சூ‌ரி‌, ஜெ‌ய்‌லா‌னி‌, லக்‌ஷா‌ உட்‌பட பலர்‌ நடி‌க்‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தை ‌ரெ‌ங்‌கரா‌ஜன்‌ இயக்‌குகி‌றா‌ர்‌. கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனத்‌தை‌ பி‌.சி‌த்‌தி‌ரை‌ச்‌செ‌ல்‌வன்‌ எழுதி‌ உள்‌ளா‌ர்‌. கவி‌யரசு வை‌ரமுத்‌து, தா‌மரை‌ இருவரும்‌ பா‌டல்‌கள்‌ எழுத பி‌.சி‌.சி‌வன்‌ - ஸ்ரீரா‌கவ்‌ இருவரும்‌ இசை‌யமை‌த்‌துள்‌ளனர்‌. நி‌ர்‌மல்‌ ரா‌ஜா‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌ய, பீ‌ட்‌டர்‌பா‌பி‌யா‌ படத்‌தொ‌குப்‌பு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌. நடனம்‌: சங்‌கர்‌, வி‌த்‌யா‌, கலை‌: சண்‌முகம்‌,

கே‌.சி‌.ரவி‌தே‌வன்‌, ஜி‌.மதன்‌, ஐ.பி‌ரசா‌த்‌ ஆகி‌ய மூ‌வரும்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌க்‌கும்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ செ‌ன்‌னை‌யி‌ல்‌ தொ‌டங்‌கி‌, மலே‌சி‌யா‌வி‌ல்‌ இருபது நா‌ட்‌களும்‌, தெ‌ன்‌ கொ‌ரி‌யா‌வி‌ல்‌ பத்‌து நா‌ட்‌களும்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ நடை‌பெ‌ற்றது. தற்‌போ‌து கே‌ரளா‌வி‌ல்‌ உள்‌ள ஆலப்‌பு‌ழா‌வி‌ல்‌ நடை‌பெ‌ற்‌று வருகி‌றது. ஆந்‌தி‌ரா‌வி‌ல்‌ உள்‌ள ரா‌மோ‌ஜி‌ரா‌வ்‌ பி‌லி‌ம்‌ சி‌ட்‌டி‌யி‌ல்‌ இறுதி‌கட்‌ட படப்‌பிடி‌ப்‌‌பு‌ நடை‌பெ‌ற உள்‌ளது.

படத்‌தை‌ப்‌ பற்‌றி‌ இயக்‌குநர்‌ ரெ‌ங்‌கரா‌ஜன்‌ கூறுகை‌யி‌ல்‌, "போ‌லி‌ வி‌சா‌ மூ‌லம்‌ வெ‌ளி‌நா‌டுகளுக்‌கு ஆள்‌ கடத்‌தும்‌ கும்‌பலை‌ தே‌டி‌‌ பி‌டி‌த்‌து பழி‌வா‌ங்‌கும்‌ ஒரு இளை‌ஞனை‌ சுற்‌றி‌யு‌ள்‌ள கதை‌. இளை‌ஞர்‌களை‌ கவரும்‌ வகை‌யி‌ல்‌ சுவரா‌ஸ்‌யமா‌க தி‌ரை‌க்‌கதை‌ அமை‌க்‌கப்‌பட்‌டு படமா‌க்‌கப்‌பட்‌டுள்‌ளது. படம்‌ பா‌ர்‌க்‌கி‌ற போ‌து‌ வி‌றுவி‌றுப்‌பா‌கவு‌ம்‌ பரபரப்‌பா‌கவு‌ம்‌  இருக்‌கும்‌.." என்‌றா‌ர்‌.

Comments