Wednesday,17th of October 2012
சென்னை::'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தேஜ், தற்போது காதலுக்கு மரணமில்லை, காந்தம், கப்பல் ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து மேலும் ஒரு புதிய படம் ஒன்றில் அவர் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
விண்ணை தொடு' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ஹீரோயினாக இங்கிலாந்து நடிகை சமீரா நடிக்கிறார். இவர் 2009ஆம் ஆண்டின் 'மிஸ் யூ.கே' பட்டம் பெற்றவராம். ஏற்கனவே இங்கிலாந்து நடிகையான எமிஜாக்சன் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஸ்த் இனோவேஷன் எண்டர்டெய்ன்ட்மெண்ட் பிரவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீகாந்த், கசியப், பரத், நிர்மல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை விஜய் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார்.
படத்தைப் பற்றி கூறிய விஜய், "உலகிலேயே இந்திய கலாச்சாரம் தான் உயர்ந்தது என்பதைச் சொல்ல்வதுதான் இப்படத்தின் கதையம்சமாகும். இது ஒரு ஹை வோல்டேஜ் ஆக்ஷன் லவ் ஸ்டோரி." என்றார்.
தேஜ் ஹீரோவாகவும், சமீரா ஹீரோயினாகவும் நடிக்க, இவர்களுடன் சாம்ஸ், நிரஞ்சன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். வீர் சமர்த் இசையமைக்க, நாகேஷ் ஆசார்யா ஒளிப்பதிவு செய்கிறார். சனத், சுரேஷ் ஆகிய இருவரும் படத்தொகுப்பு செய்கிறார்கள்.
வரும் நவம்பர் மாதம் தொடங்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், மைசுர் மற்றும் லண்டனில் நடைபெறுகிறது. சென்னை.
Comments
Post a Comment