Saturday,27th of October 2012
சென்னை::ஸ்ரீலட்சுமி சரஸ்வதி மூவிஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'பேருந்து தினம்'. இப்படத்தில் ஹீரோக்களாக சுரேஷ்தேஜ், சாய் பாஸ்கர் ஆகிய புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஹீரோயினாக புதுமுகம் ஒருவர் நடிக்க இருக்கிறார். அதற்கான தேர்வு நடைபெற்று வருகிறது.
இவர்களுடன் பெப்சி விஜயன், காதல் சுகுமார், சிசர் மனோகர், அதிதி சவுத்ரி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். உதயன் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை சினேகன், பரிணாமன், க.ராபர் ஆகியோர் எழுதுகிறார்கள். அணில் சேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கே.வி.லோகு கலை அமைக்கிறார். ராஜாமுகமது படத்தொகுப்பு செய்கிறார்.
பேருந்து தினத்தன்று நடைபெறும் சில சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காதல் கதைதான் இப்படம்.
பிராமாண்டமான முறையில் பாபு கநவரெட்டி தயாரிக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி அப்பு கே.சாமி இயக்குகிறார். இயக்குவதுடன் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிலும் அவர் நடிக்கிறார். கஸ்தூரிராஜா, தியாகராஜன், பெப்சி விஜயன் ஆகியோர் இயக்கிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இவர் இயக்கும் முதல் படம் இது.
இப்படத்தின் துவக்க விழா இன்று (அக்.26) பாடல் பதிவுடன் சென்னையில் நடைபெற்றது. அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, ராமநாதபுரம், ராமேஷ்வரம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
Comments
Post a Comment