சினிமாவில் மீண்டும் நடிப்பேன்: மீனா பேட்டி!!!

Thursday,25th of October 2012
சென்னை::தமிழ் ரசிகர்களை அழகால் வசிகரித்தவர் மீனா. முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாய் நடித்தார். தெலுங்கு, கன்னட, மலையாள மொழி படங்களிலும் கலக்கினார்.

2009-ல் வித்யாசாகர் என்ற சாப்ட்வேர் என்ஜினீயரை மணந்து சினிமாவுக்கு முழுக்கு போட்டு ஒதுங்கினார். கடந்த வருடம் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நைனிகா என பெயர் சூட்டியுள்ளார்.

குடும்ப வாழ்க்கை குறித்து மீனா மனம் திறந்து அளித்த பேட்டி வருமாறு:-

கணவரும், மகளும் எனக்கு உலகமாகி விட்டனர். அவர்களை மனதில் வைத்து வாழ்க்கையை ஓட்டுகிறேன். என் கணவர் வித்யாசாகர் சாப்ட்வேர் என்ஜினீயர் தொழிலைப் போலவே அவர் மனதும் சாப்ட் ஆக உள்ளது.

நண்பர்கள் மூலம்தான் அவர் பழக்கமானார். நட்பாக பழகினோம். ஒருநாள் என்னை காதலிப்பதாக சொன்னார். திருமணம் செய்து கொள்வோமா என்றும் கேட்டார். எனக்கும் அவரை பிடித்தது சரி என்றேன். திருமணத்துக்கு பிறகு நடிக்க தடை போடவில்லை. நானாகவே வேண்டாம் என்று விலகினேன். குழந்தை பிறந்த பிறகு இன்னும் ஒதுங்க வைத்து விட்டது.

மகளுக்கு நைனிகா என பெயரிட்டோம். அவள் பிறந்து 21 மாதம் ஆகிவிட்டது. எப்போதும் நான் கூடவே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். என் கணவர் அவளை கண்டு கொள்வது இல்லை. வேலைக்கு போய் போனில் விசாரிப்பதோடு சரி. எனக்கு பக்தி ஜாஸ்தி. சிறு வயதில் என் தந்தை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுவார். அவருடன் நானும் மாலை அணிந்து விரதம் இருந்து சபரி மலைக்கு போய் இருக்கிறேன். எந்த நல்ல காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் திருப்பதி கோவிலுக்கு போவதை வழக்கமாக வைத்துள்ளேன். திருமணம் அங்குதான் நடந்தது. குழந்தைக்கு

பெயர் சூட்டுதல், மொட்டை அடித்தல் போன்றவற்றையும் திருப்பதி கோவிலில்தான் செய்தோம். அந்த கோவிலுக்கு போகும் போதெல்லாம் என் மனம் பஞ்சுமாதிரி மென்மையாகி விடுகிறது.

நான் நடிகையாவதற்கு என் அம்மா, அப்பாதான் காரணம். என் தந்தை ஆசிரியராக இருந்தார். பொறுமையாக யோசித்து முடிவுகளை எடுப்பார். என் தாய் அதற்கு நேர்மாறானவர். எல்லா முடிவுகளையும் அவசரப்பட்டு எடுப்பார். நடிப்பு என்பது எனக்கு பிடித்த விஷயம். அதை விட்டு என்னால் போக முடியாது மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன். சினிமாவிலோ அல்லது டி.வி. தொடர்களிலோ தொடரந்து நடிப்பேன்.

சிறு வயதிலேயே நடிக்க வந்ததால் என்னால் படிக்க முடியாமல் போய்விட்டது. எனது மகளுக்கு அதுபோன்ற நிலைமை வரவிட மாட்டேன். அவளை நன்றாக படிக்க வைப்பேன்.

இவ்வாறு மீனா கூறினார்.

Comments