சசிகுமார் ஜோடியாக நடிக்கவில்லை-ஹன்சிகா!!!

Saturday, 6th of October 2012
சென்னை::இயக்குனர் சசிகுமார் ஜோடியாக ஹன்சிகா நடிக்கப்போவதாக செய்திகள் வெளியானது. சசிகுமார் சுப்ரமணியபுரம் படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது அவர் நடித்த 'சுந்தரபாண்டியன்' படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது.

சசிகுமார் நாயகனாக நடிக்கும் புதுப்படமொன்றை சாக்ரடீஸ் இயக்குகிறார். இவர் கமலஹாசன், மவுலியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்பட்டது.

விஜய்யுடன் 'வேலாயுதம்' படத்திலும், உதயநிதி ஸ்டாலினுடன் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திலும் ஹன்சிகா நடித்துள்ளார். தற்போது சூர்யா ஜோடியாக 'சிங்கம்-2' படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே புது நடிகர் உதயநிதி ஜோடியாக நடித்ததால் சசிகுமாருடன் நடிக்க மறுக்கவில்லை என்றும் தகவல் வெளியானது.

இந்த செய்திகளை தற்போது ஹன்சிகா மறுத்துள்ளார். தனது டுவிட்டரில் சசிகுமார் ஜோடியாக நான் நடிக்கவில்லை. 'சிங்கம்-2' படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன் என்று கூறி உள்ளார்.

Comments