Sunday,14th of October 2012
சென்னை::சீனுராமசாமியின் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் விஷ்ணு, 'நீர்ப்பறவை' தனக்கு பெரிய பிரேக்காக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்போடு இருக்கிறார். அந்த அளவுக்கு இப்படத்திற்காக உழைத்திருக்கும் விஷ்ணுவுக்கு இந்த படத்தில் கடலில் கட்டு மரத்தில் பயணித்ததில் கூட கஷ்ட்டம் தெரியவில்லையாம். சுனைனாவுடன் காதல் காட்சிகளில் ஈடுபட்டபோதுதான் மிகவும் கஷ்ட்டப்பட்டாராம்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுக்குப் பிறகு பத்திரிகையாளர்களை படப்பிடிப்புக் குழுவினர் சந்தித்தார்கள். அப்போது சீனுராமசாமி பேசும் போது,"விஷ்ணுவுக்கு கை அடிப்பட்டிருப்பதைக் கூட நினைத்துப் பார்க்காமல் அவருக்கு கஷ்ட்டமான காட்சிகளை கொடுத்தேன்." என்றார்.
பிறகு பேசிய விஷ்ணு, இந்த படம் ஆரம்பிப்பதற்கு முன்பு எனது கையில் பலத்த அடிப்பட்டு விட்டது. அப்போது நம்மலால் ஏன், இந்த படம் நிக்கனும் என்று நினைத்து, வேறு ஹீரோவை வச்சு பண்ணிக்குங்க சார் என்று உதயநிதி சாரிடம் சொன்னேன். எனக்காக இயக்குநர் சீனுராமசாமி ஏன் பாதிக்க வேண்டும் என்றும் நினைத்தேன். இருந்தாலும் உதயநிதி சாரும், சீனுராமசாமி சாரும் எனக்காக மூன்று மாதங்கள் காத்திருந்தார்கள். இந்த படத்தில் எனக்கு ரொம்ப கஷ்ட்டம் கொடுத்ததாக சீனு சார் அடிக்கடி சொல்றாரு. அவர் சொன்னதை நான் செய்த போது எனக்கு எந்த கஷ்ட்டமும் தெரியல. அது எனக்கு எனர்ஜியைதான் கொடுத்தது.
ஆனா, ஒன்று மட்டும் தான் எனக்கு ரொம்ப கஷ்ட்டமாக இருந்தது. அதுதான் காதல் காட்சிகள். ஒரு நாள் காதல் காட்சிகளில் நடித்துவிட்டு ரொம்பவே டையாட ஆகிட்டேன். அந்த அளவுக்கு எனக்கு காதல் காட்சிகளில் நடிப்பது ரொம்பவே க்ஷ்ட்டமாக இருந்தது." என்று நகைச்சுவையாக கூறினார்.
Comments
Post a Comment