Wednesday, 3rd of October 2012
சென்னை::பிரியாமணியும், ஸ்ரேயாவும் கடும் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். இதனால் இருவரும் எடை குறைந்து உடல் மெலிந்து விட்டார்கள்.
ஸ்ரேயா சந்திரா என்ற கன்னட படத்தில் நடித்தார். தமிழிலும் இப்படம் ரிலீசாகிறது. இதில் ஸ்ரேயா களரிச் சண்டையில் ஈடுபடுவது போல் காட்சிகள் உள்ளன. வீரர்களுடன் ஆக்ரோஷமாக ஸ்ரேயா மோதி சண்டையிடுவது போல் இக்காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த படத்தில் நடிப்பதற்காகவே ஸ்ரேயா உடல் எடையை குறைத்து மெலிந்துள்ளார்.
பிரியாமணி ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்த சாருலதா படம் சமீபத்தில் ரிலீசானது. இதில் நடிப்பதற்காகவே உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்துள்ளார். புது நடிகைகள் வரத்தால் மார்க்கெட்டை தக்க வைக்க மூத்த நடிகைகள் இதுபோல் எடையை குறைத்து மெலிந்து வருகிறார்கள்
Comments
Post a Comment