Sunday,28th of October 2012
சென்னை::கவுதம் மேனன் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் 'நீதானே என் பொன்வசந்தம்' காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகிறது.
கவுதம் மேனன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் படம் 'நீதானே என் பொன்வசந்தம்'. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
தமிழ் பதிப்பில் ஜீவா ஹீரோவாக நடித்திருக்கிறார். மற்ற இரண்டு மொழிகளிலும் வெவ்வேறு ஹீரோக்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால், நாயகி மட்டும் மூன்று மொழிப் படங்களிலும் சமந்தாதான்.
இப்படத்தின் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியிருக்கும் இப்படம் காதல் தினமான வரும் பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகுகிறது.
Comments
Post a Comment