ஒரு கோடி கேட்ட நடிகை!!!:-நடிகைக்கு ஹீரோ தந்த கவுரவம்!!!

Thursday,18th of October 2012
சென்னை::தல படத்தை விஷ்ணுவான இயக்கம் இயக்குறாரு. படத்துல வர்ற ஒரு ஆக்ஷன் காட்சியை டூப் இல்லாம பண்ணனும்னு தலகிட்ட இயக்கம் சொன்னாராம். தல நடிகரும் ஓகே சொல்லி, கஷ்டப்பட்டு நடிச்சாராம்... ஆனா, திருப்தி இல்லேன்னு சொல்லி அதே காட்சியை ரெண்டு முறை இயக்கம் படமாக்கினாராம். மூணாவது முறையும் படமாக்கணும்னு சொன்னப்போ நடிகரு நேரா கேரவன்ல போய் உட்கார்ந்துட்டாராம்... அத்தோடு அந்த சீனை பத்தி இயக்கம் பேச்சே எடுக்கலையாம்...

பிரியாணி படத்துல காட்டன் வீர ஹீரோவோடு நடிக்க நயன நடிகையை கேட்டாங்களாம்... ஒரு கோடி சம்பளம் கேட்டாராம். எவ்வளவு பேசியும் சம்பளத்தை குறைக்க மறுத்துட்டாராம்... அதனால வேற ஹீரோயினை படக்குழு தேடுறாங்களாம்... இதனால ஷூட்டிங்கும் தள்ளிப்போகுதாம்...

வாய்ப்புகளை இழந்த நமீ நடிகை திரும்ப ஃபீல்டுல பிசியா நடிக்க ஆசைப்பட்டாராம். கோலிவுட், சான்டல்வுட், டோலிவுட், மாலிவுட் கைவிடும்போது நடிகைகளுக்கு தஞ்சம் தர்றது போஜ்புரிஉட்தான். அதனால அந்த பக்கம் போயிட்டு, சில ஹீரோக்களோடு நட்பா பழகினாராம்... ஆனாலும் வாய்ப்புகள் வராததால திரும்ப வந்துட்டாராம்...

ஸ்கின் அலர்ஜியால சமந்த நடிகை 2 மாசமா ஷூட்டிங்ல கலந்துக்காம இருந்தாரு. இப்போ திரும்ப நடிக்க வந்துட்டாரு. ஆனாலும் பழைய எனர்ஜி அம்மணிக்கு இல்லையாம். எப்போவும் டல்லா இருக்காராம்... சில நேரங்கள்ல அசிஸ்டன்ஸ்ங்க மேல எறிஞ்சி விழுறாராம்... பெரிய படங்கள் எல்லாம் கையை விட்டுப்போன விரக்திதான் இதுக்கு காரணம்னு கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க...

பஞ்ச் நடிகரோட படம்னா வழக்கமா விளம்பரத்துல அவரை மட்டும் தான் புஸ்டப் பண்ணுவாங்க. முன்பு மூணுஷாவோட நடிக்கும்போது மட்டும் அவரையும் விளம்பரத்துல சேருங்கன்னு நடிகரே உத்தரவு போடுவாரு. அதுக்கு பிறகு எந்த நடிகைக்கும் அந்த கவுரவத்தை பஞ்ச் நடிகர் கொடுக்கல... நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போ, காஜலான நடிகைக்கு விளம்பரத்துல தனக்கு இணையா புஸ்டப் பண்ண சொல்லியிருக்காராம்...
கல்யாணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன்னு சம்விருத நடிகை சொல்லிட்டாரு. ஆனா தொடர்ந்து நடிக்கணும்னு கணவர் குடும்பத்துக்காரங்க பிரஷர் தர்றாங்களாம்... ஆனா நடிகை ஒத்துக்க மாட்டேங்கிறாராம். விஷயம் கேள்விப்பட்டு ஒரு மலையாள தயாரிப்பு, நடிகைகிட்ட கால்ஷீட் கேட்டு போனாராம்... நடிகை கோபப்பட்டு தயாரிப்பை திருப்பி அனுப்பிட்டாராம்...

சொல்றாராம்... வாட்டர் பேர்ட் படத்துல ஆக்ஷன் சீன்லயெல்லாம் பயமில்லாம நடிச்சாராம். சுனே ஹீரோயினோட கட்டிப்பிடிச்சி கிஸ் கொடுத்து நடிக்க சொன்னப்போ, டேக்குக்கு மேல டேக்கு வாங்கி ஒரே சீனை நெறய முறை நடிச்சாராம். நிஜத்திலேயே இது ஹீரோவோட பயமா அல்லது சான்ஸ் கெடச்சுதுன்னு ஒண்ணுக்கு பத்துமுறை இச் கொடுக்க செஞ்ச தந்திரமான்னு புரியாம இயக்கம் தவிச்சாராம்...

ஜெயமான பிரகாஷ் அப்பா நடிகரு, மெட்ராஸ்ல ஒன் டே படத்தின் ஒரிஜினல மல்லுவுட்ல பாத்தாராம். அந்த படம் கோலிவுட்ல ரீமேக் பண்றது தெரிஞ்சதும் இயக்கத்தபோய் நேர்ல பாத்து சான்ஸ் கேட்டாராம்... குறிப்பிட்ட கேரக்டர்ல வேற யாரையும் போட்டுடாதீங்க. எனக்கு வாய்ப்பு தாங்கன்னு தொலைச்செடுத்தாராம். இயக்கமும் வேற வழியில்லாம நீங்களே நடிங்கன்னு வாய்ப்பு கொடுத்துட்டாராம்...

மில்க் இயக்கத்தோட படத்துலதான் ஸ்டன்ட் கோழி ஹீரோ அடுத்ததா நடிக்கிறதா இருந்தாரு. திடீர்னு மனம் மாறி மலைக்கோட்டை டைரக்டர் படத்துல நடிக்க கால்ஷீட் கொடுத்துட்டாராம்... இப்போதைக்கு ஒரு வருஷம் ஒரே படத்துல சிக்கி, அவார்டு ரேஞ்சு படத்துல நடிக்க வேண்டிய அவசியம் இல்ல. கமர்ஷியல் படங்கள்ல நடிச்சி, இழந்த மார்க்கெட்டை பிடிக்க பாருன்னு அப்பாவும் அண்ணனும் அட்வைஸ் பண்ணினாங்களாம்... அதனாலதான் இந்த மாற்றமாம்...

Comments