வடிவேலு படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்காத பரிதாபம்!!!

Tuesday,23rd of October 2012
சென்னை::ஒரு காலத்தில் வடிவேலு நடித்திருக்கிறார் என்று சொன்னால் உடனடியாக அந்த படம் வியாபாரமாகி விடும். அப்படி தான் நடிக்கிற படங்களின் வியாபாரத்தை நிர்ணயித்து வந்தார் வடிவேலு. ஆனால் அரசியல் பிரவேசம், விஜயகாந்துடன் மோதல் போன்ற சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நடைபெற்ற பிறகு மார்க்கெட்டே தலைகீழாகி விட்டது. வடிவேலுவுக்கு படம் கொடுத்தால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படும் என்று பயந்து அவருக்கு வேண்டப்பட்டவர்களே அவரை கழட்டி விட்டனர். இதனால் வருடக்கணக்கில் படமே இல்லாமல் மதுரைக்கும், சென்னைக்கும் பறந்தபடி பொழுதை கழித்து வருகிறார் வைகைப்புயல்.

இந்த நிலையில், கடந்த ஆறு மாதமாக சிம்புதேவன் இயக்கத்தில் ஏற்கனவே நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடிப்பது போலவும், அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இதுபற்றி விசாரித்தபோது, சிம்புதேவன் படத்தில் வடிவேலு நடிப்பதில் ஆர்வமாக உள்ளார். அதேபோல், புதுமுக டைரக்டர் ஒருவர் சொன்ன தெனாலிராமன் என்றொரு கதையிலும் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த கதைகளில் வடிவேலுவை வைத்து படமெடுக்கத்தான் எந்த தயாரிப்பாளர்களும் முன்வரவிலலையாம். இருப்பினும் தொடர்ந்து திரைக்குப்பின்னால் தீவிர முயற்சிகள் மட்டுமே நடந்து வருகிறதாம்

Comments