அனுஷ்காவா...! அலறும் ரிச்சா!!!

சென்னை::"மங்காத்தாவை  அடுத்து வெங்கட்பிரபு இயக்கும், "பிரியாணி படத்தில், கார்த்திக்கு ஜோடியாக, ரிச்சாவைத் தான் ஒப்பந்தம் செய்துள்ளனர். இருப்பினும், "அலெக்ஸ் பாண்டியன் படத்தைத் தொடர்ந்து, மீண்டும் கார்த்திக் நடிக்கும் படத்தில், அனுஷ்கா நடிப்பதாக வெளியான செய்தியை அடுத்து, அலறிவிட்டார் ரிச்சா. ஏற்கனவே, தமிழில் நடித்த, "மயக்கம் என்ன, ஒஸ்தி ஆகிய படங்கள் தோல்வி அடைந்து, தன் மீது, ராசி இல்லாத நடிகை என்ற முத்திரை விழுந்திருப்பதால் தான், இப்படி நடந்து விட்டதோ என, பலவிதமான யூகங்களுடன், உடனடியாக வெங்கட்பிரபுவை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார் ரிச்சா. அப்போது, "பிரியாணி பட நாயகி ரிச்சா தான்; வதந்திகளை நம்ப வேண்டாம் என, அவர் உறுதிபட சொன்ன பிறகு தான், நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் ரிச்சா.

Comments