Tuesday,2nd of October 2012
சென்னை::திவ்யாவை டி.வி. ஷோ ஒன்றில் தாக்கி பேசியது ஏன்? என்றதற்கு பதில் அளித்தார் நடிகை ராகினி. இது பற்றி அவர் கூறியதாவது: டி.வி. ஷோ ஒன்றில் திவ்யாவை தாக்கி பேசியது ஏன்? என்கிறார்கள். சக ஹீரோயின்களை நான் ஒருபோதும் தவறாக பேசியது இல்லை. அது என்னுடைய வேலை கிடையாது. வாழு வாழவிடு என்பதுதான் என் பாலிசி. டி.வி. நிகழ்ச்சியின்போது நிறைய விஷயங்கள் சொன்னேன். அது எடிட் செய்யப்பட்டு நான் தாக்கி பேசியது மட்டும் காட்டப்பட்டிருக்கிறது. இரண்டு ஹீரோயின்களுக்குள் சண்டை நடந்தால் அதை மக்கள் ரசிக்கிறார்கள் என்று கருதுகிறேன். பப்ளிசிட்டிக்காக நான் யார் பெயரையும் இழுக்கவில்லை. எதையும் வெளிப்படையாக பேசுபவள். எனக்கு யாரையாவது பிடிக்காவிட்டால் அவர்கள் பெயரைச் சொல்வதில் பயம் கிடையாது. என்னை யாருக்காவது பிடிக்காவிட்டால் அவர்களும் வெளிப்படையாக என் பெயரை சொல்லலாம். முகத்துக்கு நேராக சிரித்துவிட்டு முதுகில் குத்துபவர்களை எனக்கு பிடிக்காது. 15 படங்களில் நடித்துவிட்டேன். சில படங்களை தவிர்க்க நினைக்கும்போது அதிக சம்பளம் கேட்டு விரட்டிவிடுவேன். ஹீரோயின்களை கிள்ளுக்கீரையாக, பொம்மையாக பலர் நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுடன் நான் நடிக்க மாட்டேன். மலையாளத்தில் மம்மூட்டியுடன் நடிக்கிறேன். சில கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடிப்பது பற்றி பேசி வருகிறேன்.
Comments
Post a Comment