கிளாமரை நம்பி பாலிவுட்டுக்கு போகும் ஹீரோயின்கள் : இலியானா தாக்கு!!!

Saturday, 6th of October 2012
சென்னை::கிளாமரை நம்பித்தான் பல ஹீரோயின்கள் பாலிவுட்டில் நடிக்கப் போகிறார்கள் என்றார் இலியானா. இது பற்றி அவர் கூறியது: இன்னும் சில மாதங்களில் நான் மும்பையில் குடியேற திட்டமிட்டிருக்கிறேன். தற்போதைக்கு தமிழ், தெலுங்கில் புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. ‘பர்பிÕ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது தென்னிந்திய படங்கள் ஒப்புக்கொள்வதை தவிர்த்தேன். இப்போது அப்படம் முடிந்துவிட்டது. பாலிவுட்டில் எனது முழு கவனத்தையும் செலுத்த உள்ளேன். மும்பையில் சொந்த வீடு வாங்க உள்ளேன். அதற்கான தேடுதல் நடக்கிறது. இதுநாள்வரை டோலிவுட் படங்களில் நடித்து வந்தேன். உடனடியாக அதை விட்டு வருவது இயலாத காரியம். நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் நடிப்பேன். தெலுங்கு, இந்தி படங்களில் நடிப்பது வித்தியாசமான அனுபவம். இரண்டுமே கலாசார ரீதியில் மாறுபட்டிருக்கிறது. தென்னிந்தியாவிலிருந்து இந்தியில் நடிக்க செல்லும் பல ஹீரோயின்கள் கிளாமர் வேடத்தை நம்பியே செல்கிறார்கள். அதுபோல் செல்லக்கூடாது. நல்ல கேரக்டர் கிடைத்தால் நடிப்பது என்று காத்திருந்தேன். அதற்கேற்ப ‘பர்பிÕ படம் அமைந்தது. வங்காள பெண்ணாக நடித்தேன். முதலில் இதன் ஸ்கிரிப்ட் கேட்டபோது எனது கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஏற்பார்களோ என்று சந்தேகப்பட்டேன். ஆனால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க எந்த பயிற்சியும் மேற்கொள்ளவில்லை. இயக்குனர் அனுராக் பாசு சொன்னபடி நடித்தேன். இப்போதுதான் இந்தி கற்கிறேன். ஆனாலும் எனது கேரக்டருக்கு நானே டப்பிங் பேசினேன்.

Comments