Saturday, 6th of October 2012
சென்னை::பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படத்தின் துவக்க விழாவாக இருந்தால், "மெகா சைஸ் அழைப்பிதழ் அச்சடித்து, ஆளுயர கட்-அவுட் வைத்து; வி.ஐ.பி.,க்களை வரவழைத்து விழாவை அமர்க்களப் படுத்துவார்கள். ஆனால், தற்போது எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், காதும் காதும் வைத்தது போல கேமராவை தூக்கிக் கொண்டு படப்பிடிப்புக்கு கிளம்பிவிடுகின்றனர். அஜீத் நடிக்கும் புதிய படங்களின் படப்பிடிப்பு எந்த ஆரவாரமும் இல்லாமல் தான் நடக்கிறது. கதை ரெடியானதும் தலைப்பைக்கூட முடிவு செய்யாமல் முக்கால்வாசிப் படத்தை முடித்து விட்டார் விஷ்ணுவர்த்தன். அதேமாதிரி, விஜயா வாஹினி பட நிறுவனத்தில், அஜீத் நடிக்கும் படத்தின் வேலைகளை படுஜோராக செய்து வருகிறார் இயக்குனர் "சிறுத்தை சிவா. திரைக்கதை வேலைகளை முடித்து படப்பிடிப்பு கிளம்ப ரெடியாக உள்ளனர். இது அஜீத்துக்கு, 53வது படமாகும். இதில், அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இவ்வளவு ஏற்பாடுகள் நடந்தும், இன்னும் படத் தலைப்பு பைனல் ஆகவில்லை. இதற்கிடையே, "வெற்றி கொண்டான் என்ற தலைப்பை வைக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குனர்.
Comments
Post a Comment