தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள்!!!

Tuesday,23rd of October 2012
சென்னை::இந்த ஆண்டு தீபாவளியன்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் நவம்பர் 13ம் தேதி தீபாவளி பண்டிகையன்று விஜய் நடித்துள்ள துப்பாக்கி, சிம்பு நடித்துள்ள போடா போடி ஆகிய முன்னணி கதாநாயகர்கள் நடித்த படம் வெளியாகிறது.
இது மட்டுமல்லாமல், விஷால் நடித்துள்ள சமர் படமும் தீபாவளியன்று வெளியாக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.
தீபாவளியன்று வெளியாக உள்ள படங்களின் பட்டியலில் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள கும்கியும், சிறிய தயாரிப்பு நிறுவனத்தின் படமாக கள்ளத்துப்பாக்கியும் வெளியாகிறது.
தீபாவளிப் பட்டியல் இதோடு நின்றுவிடவில்லை. நடிகர் மன்சூர் அலிகான் நடித்துள்ள லொள்ளு தாதா பராக் பராக் படம் வெளியாகிறது.
இந்த படங்களின் வரிசையில் துப்பாக்கியும், லொள்ளு தாதா பராக் பராக் படங்கள் மட்டுமே தீபாவளி வெளியீட்டை உறுதி செய்துள்ளன.
பொறுத்திருந்து பார்ப்போம்.. தீபாவளி படங்கள் வெடிக்கும் பட்டாசா அல்லது புஸ்வானமா என்று?

Comments