Tuesday,23rd of October 2012
சென்னை::‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் சுபா பட்டேலா. பெங்களூரைச் சேர்ந்த இவர் மிஸ் பெங்களூராகவும் தேர்வானவர். தன்னுடைய முதல் படத்திலேயே நடிப்பாலும், அழகாலும் தமிழ் சினிமா ரசிகர்களை கிறங்கடித்தவர்.
‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படத்திற்கு பிறகு தமிழில் அவருக்கு படங்கள் அமையாததால் தெலுங்கு பக்கம் போய், அங்கு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இவர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த ஒரு வாரத்திற்கு முன் கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து நேற்று இரவு அவர் திடீரென மரணமடைந்தார்.
இவருடைய மரணம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Comments
Post a Comment