Saturday,27th of October 2012
சென்னை::அலெக்ஸ் பாண்டியன் ட்ரெய்லரில் பாய்ந்து வரும் சுமோ டயரை அரிவாளால் கீறி அந்தரத்தில் பறக்கவிட்டு பனை மரத்தை முறித்துப் போடுகிறார் கார்த்தி. ட்ரெய்லரே எண்பதின் தெலுங்குப் படம் போலிருக்கிறது என்றால் முழுப் படமும்? ஏழெட்டு ஊர்களையாவது கார்த்தி ஒத்தைக்கு அடித்து காலி செய்வார் என்பது திண்ணம்.
ஞானவேல்ராஜாவின் அடுத்த வெளியீடு கும்கி, அதையடுத்து அலெக்ஸ் பாண்டியன். ரிலீஸ் தேதி நெருங்குவதால் அலெக்ஸ் பாண்டியனின் வீர பராக்கிரம செய்திகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளது.
சிறுத்தை ஹிட்டானதுக்கும், சகுனி செட்டாகாததற்கும் ஆக்சன் பற்றாக்குறையே காரணம் என்று கண்டறிந்ததால் அலெக்ஸ் பாண்டியனில் டாப் டூ பாட்டம் அடித்து தூள் கிளப்பியிருக்கிறார்கள். நம்பாதவர்கள் ட்ரெய்லரை பார்த்துக் கொள்ளவும். இப்படி படம் முழுக்க அடிதடிதான் என்று நினைத்துவிடக் கூடாதில்லையா, அதற்காக படத்தின் பாடல்கள், இசை எல்லாம் சூப்பர் என்று கார்த்தி தேவி ஸ்ரீபிரசாத்துக்கு எஸ்எம்எஸ் செய்ய, அதனை இவர் ட்வீட்ட...
அலெக்ஸ் பாண்டியனின் விளம்பர வேட்டை ஆரம்பமாகிவிட்டது. தலைநகரம், மலைக்கோட்டை போன்ற கரம் மசாலாவை இயக்கிய சுராஜ்தான் இந்தப் படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment